- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நெடுஞ்சாலை ஓரம் மலைபோல் தேங்கிய குப்பை கழிவுகள்.
நெடுஞ்சாலை ஓரம் மலைபோல் தேங்கிய குப்பை கழிவுகள்.
L.குமார்
UPDATED: Nov 2, 2024, 9:54:59 AM
கும்மிடிப்பூண்டி
கவரப்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் சத்யவேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் டன் கணக்கில் அழுகிய காய்கறிகள், கோழி கழிவு, மருத்துவக் கழிவு உள்பட பலதரப்பட்ட குப்பை கழிவுகளுடன், தனியார் தொழிற்சாலைகளின் ரசாயனகழிவுகள், டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் மனித மலக்கழிவுகள் என அனைத்தும் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் கீழ்முதலம் பேடு ஏரியின் நிலத்தடி நீர் நச்சடைவதுடன், நீரில் இருந்து மதகுகள் வழியாக வெளியேறும் உபரி நீரானது அங்கு கொட்டப்படும் மனித மலக்கழிவு உள்ளிட்ட நச்சுக்கழிவுகளுடன் கலந்து விவசாய நிலங்களுக்கு செல்வதால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது.
அதேபோல் நச்சுக் கழிவுகளில் உருவாகும் கொசுக்களால் அவ்வழியாக வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு விபத்துக்கள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் கழிவுகளில் சுற்றித் திரியும் பன்றி மற்றும் நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதாலும் விபத்துகள் அதிகரிக்கிறது.
மாநில எல்லையோரம் ஏற்படும் இத்தகைய சுகாதார சீர்கேட்டிற்கு அரசு துறை அதிகாரிகள் ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு