டன் கணக்கில் சேர்ந்த குப்பைகள் - கையுறை இல்லாமல் அகற்றி வரும் தூய்மை பணியாளர்கள்.

JK

UPDATED: Nov 1, 2024, 12:40:29 PM

திருச்சி

நேற்று தமிழகம் முழுவதும் தீபாவளி திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பெருநாளையொட்டி பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தனர்.

இதன் காரணமாக அதில் இருந்த வெடியின் குப்பைகள் டன் கணக்கில் சேர்ந்துள்ளது. இதே போல் திருச்சியில் வெடித்த வெடியின் குப்பைகளை அகற்றும் பணிகளில் இன்று காலை முதலே தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

திருச்சி முக்கிய வீதிகளான பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி, தில்லை நகர், பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லாரிகளில் குப்பைகளை அள்ளி செல்கின்றனர்.

தீபாவளி

குப்பை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் திருச்சி மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு தீபாவளி வெடியின் குப்பைகளை சுமார் 1147 டன் அளவு அகற்றினர் இந்த ஆண்டு இதை விட அதிகமாக இருக்கும் என தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கூப்பைகளை அகற்றும்போது பாதுகாப்பாக கையுறைகள் அணிய வேண்டும், உரிய உபகரணம் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டாலும் திருச்சியில் தூய்மை பணியாளர்கள் எந்தவித கையுறை அணியாமலும் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் குப்பையை அகற்றி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended