• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜபாளையத்தில் பல்வேறு வடிவங்களில் மக்களை கவரும் வகையில் விநாயகர் சிலைகள் தயார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜபாளையத்தில் பல்வேறு வடிவங்களில் மக்களை கவரும் வகையில் விநாயகர் சிலைகள் தயார்.

அந்தோணி ராஜ்

UPDATED: Aug 31, 2024, 6:50:38 AM

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையத்தில் இயங்கும் ஆன்மீக நற்பணி மன்றம் சார்பில் இந்த ஆண்டு 37 வது முறையாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்காக 5 ரதங்களில் 6 விதமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே ரதத்தில் முன்பக்கம் குரோதி கணபதி, பின்பக்கம் மோட்ச கணபதி என இரண்டு பெரிய அளவிலான சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பாரம்பரியமான வீர விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக தம்பி முருகனுடன் சிலம்பம் விளையாடும் விநாயகர் சிலை உருவாக்கப் பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி

மேலும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக டிரை சைக்களில் முருகனுடன் தென்னங்கீற்றுகளை எடுத்து செல்வது போன்றும், பக்தர்களை தம்பிக்கு காட்டுவதற்காக, முருகனை அழைத்துக் கொண்டு மாருதி காரில் விநாயகர் நகர் வலம் செல்வது போன்றும், குழந்தைகளை கவரும் வகையில் தம்பி முருகனுடன் விநாயர் சறுக்கி விளையாடுவது போன்றும் 6 சிலைகள் விதவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைகளை கடந்த ஒரு மாதமாக நாகை மாவட்டத்தை சேர்ந்த ஸ்பதிகள் இணைந்து சுற்று சூழலை பாதிக்காத வண்ணம் மரவல்லிக் கிழங்கு மாவு, தேங்காய் நார் உள்ளிட்ட மூலப் பொருட்களால் உருவாக்கி உள்ளனர்.

Aanmegam 

இதனை அடுத்து 6 வர்ணம் பூசும் கலைஞர்கள் இணைந்து சிலைகளுக்கான வர்ணங்களை வாட்டர் பெயிண்ட் எனப்படும் தண்ணீரில் கரையும் சாயத்தின் மூலம் கண்களை கவரும் வண்ணம் மெருகேற்றி உள்ளனர். 

இந்த சிலைகள் வடக்கு காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலுக்கு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

Breaking News

அந்த இடத்தில் 8 தினங்கள் வரை நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் 3 வேளை அன்னதானம், இலவச திருமணங்கள், இயலாதவர்களுக்கு நலத்திட்டங்கள், ஆன்மீக சொற்பொழிவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. வரும் 7ம் தேதி இரவு இந்த சிலைகள் கண்மாயில் கரைக்கப்படும்.

 

VIDEOS

Recommended