- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தொடர் கன மழையால் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்.
தொடர் கன மழையால் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்.
செ.சீனிவாசன்
UPDATED: Nov 18, 2024, 12:34:58 PM
நாகப்பட்டினம் மாவட்டம்
நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட களத்திடல்கரை பகுதியில் வகித்து வரும் செல்வி என்பவரின் ஓட்டு வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓட்டு வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் அலறி அடித்து வெளியே ஓடியதால் காயங்கள் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பேட்டி: 1.செல்வி,களத்திடல்கரை
ஏற்கனவே கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டி கொடுக்க ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி ரமேஷிடம் மனு கொடுத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் எனக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதனால் தற்பொழுது பெய்த கனமழையினால் வீடு இடிந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தோர் உயிர் தப்பி உள்ளோம்.
மேலும் வசிக்க வீடு இல்லாமல் தற்போது இடிந்த வீட்டிலேயே வேறு வழியின்றி தங்கி இருப்பதாகவும் அரசு சார்பில் கள ஆய்வு மேற்கொண்டு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
நாகையில் திருக்குவளை அருகே கனமழை காரணமாக ஓட்டு வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.