- முகப்பு
- மாவட்டச் செய்தி
- குற்றால அருவியில் வெள்ள பெருக்கு - வெள்ளத்தில் மாயமான இளைஞர் பலி.
குற்றால அருவியில் வெள்ள பெருக்கு - வெள்ளத்தில் மாயமான இளைஞர் பலி.
பாலமுருகன்
UPDATED: May 17, 2024, 11:54:31 AM
குற்றால அருவியில் வெள்ள பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியில் பலத்த மழை மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி புலி அருவி சிற்றருவி கரடி அருவி குண்டர் தோப்பு அருவி செண்பகா தேவி அருவி தேனருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளம் குளிக்க தடை அனைத்து அருவிப் பகுதிக்கும் செல்ல போலீசார் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்த போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஐந்து பேர் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அதில் 4 பேர் தப்பி வந்த நிலையில்தென்காசி மாவட்ட எஸ் பி சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் தீயணைப்பு படையினர் காணாமல் போன இளைஞர் அஸ்வினை வெள்ளப்பெருக்கில் தேடி வந்தனர்.
இந்நிலையில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த அஸ்வின் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் ( வயது 17) உயிரிழந்த நிலையில் உடல் மீட்பு.
மேலும் தென்காசி மாவட்டத்திற்கு 15.05.2024, 18.05.2024 19.05.2024 ஆகிய தினங்களில் கனமழை மற்றும் மிக கனமழையும். 16.05.2024 மற்றும் 17.05.2024 ஆகிய தினங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டது.
மேலும் தென்காசி மாவட்ட முழுவதும் 15,052024, 18.05.2024 மற்றும் 19.05.2024 ஆகிய மூன்று தினங்கள் ஆரஞ்சு அலெர்ட் என தெரிவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் கே.கமல்கிஷோர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.