• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • குன்றத்தூரில் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் தப்பி ஓட்டம்.

குன்றத்தூரில் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் தப்பி ஓட்டம்.

S.முருகன்

UPDATED: Jun 14, 2024, 11:56:33 AM

குன்றத்தூர் - பல்லாவரம் சாலை, ஆண்டாங்குப்பம் பகுதியில் தனியார் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது இங்கு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்நிலையில் இன்று போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுபவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து மற்றொரு அறைக்கு அழைத்து சென்று மருந்து கொடுப்பது வழக்கம்

இதற்காக அறையின் கதவு திறக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் சேர்ந்து கொண்டு போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்களை தாக்கி விட்டு மிளகாய் பொடியை அவர்கள் மீது தூவி விட்டு ஊழியர்கள் வைத்திருந்த சாவியை எடுத்து பூட்டை திறந்து கொண்டு ஐந்து பேர் அங்கிருந்து தப்பி சென்றனர். 

இதையடுத்து அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தப்பி சென்றவர்கள் குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஊழியர்களை தாக்கிவிட்டு தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் ஜன்னலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended