- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மழையால் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை.
மழையால் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை.
சுரேஷ் பாபு
UPDATED: Oct 21, 2024, 11:49:42 AM
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் அடுத்த புட்லூர் கோ ஆப் டெக்ஸ் நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 46).இவர் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் லட்சுமி தன் தன் வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக முனைத்திருந்த காளானை பறித்து சமைத்தார்.
அந்த உணவை காலை லட்சுமி மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த சாந்தி ( வயது 45), அலமேலு (வயது 31),வெங்கடேஷ் (வயது 23) சரண்யா (வயது 14) ஆகிய 5 பேரும் சாப்பிட்டுள்ளனர்.
காளான்
அந்த காளானை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் மேற்கண்ட 5 பேருக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதியுற்றனர்.
இதை கண்ட அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து மேற்கண்ட 5 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்கண்ட 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே காளான் சாப்பிட்டு உடல் உபாதை ஏற்பட்டு ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சம்பவம் செவ்வாப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் காளான் உட்கொண்டு சமைத்து சாப்பிட்ட இடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் லோகம்மாள் கண்ணதாசன் மாவட்ட சுகாதார அலுவலர் பிரியா ராஜ் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்கள் மத்தியில் அது போன்ற காளான் உட்கொள்ளக் கூடாது என விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள குடி தண்ணீரை ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
அதைத்தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளவர்கள் நலமுடன் உள்ளதால் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் வீடு திரும்புவார்கள் என பாதிக்கப்பட்ட நபர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் புட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் புட்லூர் ஊராட்சி செயலர் கோபிநாத் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தொடர்ந்து ஊராட்சி சார்பாக துப்புரவு பணியாளர்களைக் கொண்டு சாலைகள் முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் தூய்மையான குடிநீர் ஆங்காங்கே இருக்கின்ற குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டு வருகிறது.