- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மீன்பிடித் தடைகாலம் நிறைவடைந்ததையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லத் தொடங்கினா்.
மீன்பிடித் தடைகாலம் நிறைவடைந்ததையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லத் தொடங்கினா்.
நெல்சன் கென்னடி
UPDATED: Jun 15, 2024, 9:27:33 AM
ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடை காலம் நடைமுறைபடுத்தப்படுகிறது.
இந்தாண்டும் வழக்கம் போல வங்கக் கடலையொட்டிய, கிழக்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களிலும் தடைகாலம் ஏப்.15ஆம் தேதி தொடங்கி, ஜூன் 14ம் தேதி வரை என 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்தது.
இந்த நிலையில் நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் மீனவா்கள் உற்சாகத்துடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமாரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கடலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட 11 கடலோர மாவட்டங்களில் மொத்தம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி படகுகள் மூலம் சுமார் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.
விசைப்படகுகளில் ஐஸ்கட்டிகள், டீசல் நிரப்பும் பணிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் நடைபெற்றன. மேலும், மீனவா்கள் ஒரு வார பயணத்துக்கான உணவுப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள், எரிவாயு சிலிண்டா்கள் உள்ளிட்டவற்றை படகுகளில் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஒவ்வொரு விசைத்தறி படகுகளுக்கும் பூஜை செய்து, மீனவர்கள் வழிபட்டு படகுகளை கடலுக்கு எடுத்துச்சென்றனர். சில படகுகள் ஓரே நாளில் திரும்பி வர திட்டமிட்டுள்ளனர்.
இதனால் ஞாயிற்றுக்கிழமை மீன்களின் வரத்து அதிகமாகவே இருக்கும், அதன் விலைகளும் குறைந்து இருக்கும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, வஞ்சிரம், வவ்வால், சங்கரா, ஊழா, நண்டு, இறால் உள்ளிட்ட மக்கள் அதிகம் விரும்பி வாக்கி சாப்பிடும் மீன்கள் பெரும்பாலும் விசைப்படகுகள் மூலம்தான் கிடைக்கின்றன.
எனவே ஒரு வாரத்துக்குள் மீன்வரத்து மேலும் அதிகரித்து மீன்களின் விலை படிப்படியாகக் குறையும் என மீனவர்கள் தெரிவித்தனா்.