நாட்டுப்படகுகளை மீன்துறை அதிகாரிகள் ஆய்வு.

கார்மேகம்

UPDATED: Jun 7, 2024, 10:20:06 AM

ராமேஸ்வரம் தொண்டி புதுக்குடி மாகாசக்திபுரம் நம்புதாளை பாசிப்பட்டிணம் காரங்காடு முள்ளிமுனை புதுப்பட்டிணம் கண்கொள்ளான்பட்டிணம் சோளியக்குடி மற்றும் பல்வேறு மீனவ கிராமங்களில் சுமார் ஆயிரத்து 600 - க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் உரிமம் இல்லாத சுமார் 700 நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது.

இப் படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க தகுதியான நிலையில் உள்ளனவா ? 

என்பதையும் படகுகளின் தரம் அதில் பொருத்தப்பட்டு இயக்கப்படும் எஞ்சின் செயல்பாடு அதன் தன்மை படகுகளின் உறுதித்தன்மை குறித்தும் மீன்வள இன்ஸ்பெக்டர்கள் காளீஸ்வரன் வர்ணிகா அமலாக்கப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோர் தலைமையிலான மீன்வளத்துறை அலுவலர்களை கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்

ஆய்வில் நாட்டுப்படகு உரிமையாளர்களான மீனவர்களின் ஆதார் அட்டை மீனவர் நலவாரிய அட்டை படகுகளுக்கான லைசென்ஸ் போன்ற பல்வேறு ஆவணங்களை சோதனை செய்தனர். 

 

VIDEOS

RELATED NEWS

Recommended