• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

கார்மேகம்

UPDATED: Aug 26, 2024, 10:20:35 AM

இராமநாதபுரம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக மத்திய  வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது.

( கோடியக்கரையில்)

நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே விசைப்படகுகில் சென்று 11 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடந்த 23- ந் தேதி யன்று இலங்கை கடற்படையினரால் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை மிகுந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை தான் ஏற்கனவே பல முறை சுட்டிக்காட்டியுள்ளேன்

( தீர்வு வேண்டும்)

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 324 மீனவர்களும் 44 - படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்

இது போன்ற தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழக மீனவ சமூகத்தினர் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதுடன் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

கடந்த 2- வாரங்களில் இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடலில் மீனவர்களைத் தாக்கிய ஓரிரு சம்பவங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் இந்த பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அவசியமாகும் 

( உடனடி நடவடிக்கை)

எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைந்து விடுவிப்பதற்கு உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக நீங்கள் மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

VIDEOS

Recommended