ஆய்க்குடியில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை  உயிருடன் மீட்ட  தீயணைப்புபடையினர்.

இரா.பாலமுருகன்

UPDATED: Jun 8, 2024, 12:13:58 PM

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை உயிருடன் மீட்ட தீயணைப்பு படையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கிணற்றில் சுமார் 30 அடி ஆழம் கொண்ட உபயோகமற்ற தண்ணீர் இல்லாத கிணற்றில்  ஆய்க்குடி சிவன் கோயில் தெருவை சேர்ந்த சங்கரன் என்பவரது மகன் மகேந்திரன் என்பவர் தவறி விழுந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆய்க்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தனிப்பிரிவு காவலர் குமார் ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் விரைந்துவந்து கிணற்றில் விழுந்த மகேந்திரனை கயிறு கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர்.

இதில் தென்காசி தீயணைப்புத் மற்றும் மீட்புவநிலைய உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் சு.கணேசன், வீரர்கள் ஜெகதீஷ் குமார் கார்த்திகேயன், சுந்தர் வேல்முருகன் ஆறுமுகம் ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரின் இந்த சேவையை ஊர் பொதுமக்கள் ஆய்க்குடி காவல் நிலைய ஆய்வாளர் வெகுவாக பாராட்டினார்கள்.

 

VIDEOS

Recommended