பெருமாள் பேட்டையில் ஐந்தாம் ஆண்டு காளை விடும் விழா.

அஜித் குமார்

UPDATED: Apr 30, 2024, 11:21:54 AM

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு அருகே உள்ள பெருமாள் பேட்டை கிராமத்தில் காளியம்மன் ஆலய சித்திரை பெருவிழா மற்றும் ஐந்தாம் ஆண்டு காளைகள் விடும் விழா நடைபெற்றது.

இந்த காளைகள் விடும் விழாவில் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 300 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு வெற்றி இலக்கை நோக்கி வீதியில் ஓடின.

மேலும் பல்லாயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு வீதியில் ஓடிய காளைகளின் மீது கைகளை போட்டு தங்களுடைய வீரத்தை பறைசாற்றினர்.

வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 45 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூபாய் 30, 000 உள்ளிட்ட 66 பரிசுகளை விழா குழுவினர் வழங்கினர்.

இந்த காளை விடும் விழாவில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களுக்கு தேவையான மருத்துவ வசதி குடிநீர் வசதி உணவு வசதி உள்ளிட்டவைகளை கிராமம் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

 

  • 1

VIDEOS

Recommended