- முகப்பு
- மாவட்டச் செய்தி
- விவசாயி மகள் பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்
விவசாயி மகள் பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்
ராஜ்குமார்
UPDATED: May 12, 2024, 6:03:37 AM
கோவை பொள்ளாச்சி அருகே உள்ள காரச்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுச்சாமி இவருடைய மகள் தீபிகா ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள பி எம் ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்
நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்
இவர் தமிழில் 99 மதிப்பெண்கள் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள் கணிதம் 100 மதிப்பெண் அறிவியல் 100 மதிப்பெண் சமூக அறிவியல் 100 மதிப்பெண் என மொத்தம் 498 மதிப்பெண்களை பெற்றுள்ளார்,
இந்த நிலையில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி தீபிகா கூறுகையில் நான் இதே பள்ளியில் தான் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன் எனக்கு அனைத்து வகைகளிலும் ஆசிரியர்கள் மற்றும் எனது பெற்றோர்கள் உறுதுணையாக இருந்ததால் தான் 498 மதிப்பெண்கள் பெற முடிந்தது
எனவே எனக்கு உதவிகரமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பினையும் இதே பள்ளியில் தொடர்ந்து படிக்க உள்ளேன்
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதை என்னுடைய லட்சியமாக உள்ளது அதன் பிறகு என்ன படிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்வேன் என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.