- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து விவசாயி பிச்சை எடுக்கும் போராட்டம்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து விவசாயி பிச்சை எடுக்கும் போராட்டம்.
தருண் சுரேஷ்
UPDATED: Jun 28, 2024, 10:09:33 AM
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை தடுக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து விவசாயி செந்தில் என்பவர் கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி பகுதிகளில் கடை கடையாக சென்றும், வீடுகளிலும் பிச்சை எடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், சேகரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செந்தில். இவர் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டி தொடர்ந்து அரசுக்கு குரல் கொடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆண்டுதோறும் தமிழக அரசு பாசன ஆறு, வாய்க்கால் போன்ற நீர்நிலைகளை பொதுப்பணித்துறை வாயிலாக தூர்வாறும் பணிக்காக ஒதுக்கப்பட்டு வரும் பல கோடி ரூபாயினை ஆட்சியாளர்கள் அதிகாரிகள் துணையுடன் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதால் நீர்நிலைகள் அனைத்தும் தூர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமலும், மழைக்காலங்களில் வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பொருளாதார இழப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை கண்டிக்கும் வகையிலும் திமுக அரசு நீர்நிலைகளை பாதுகாத்து விவசாயத்தையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டி அரசின் கவனத்தை ஈர்க்க நூதன முறையில் சேகரை செந்தில் என்ற விவசாயி கழுத்தில் மணிமாலைகளை அணிந்துகொண்டு மேளம் அடித்து கடை கடையாகவும், வீடுவீடாகவும் சென்று பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.