- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் - டி.ஆர்.பி.ராஜா.
வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் - டி.ஆர்.பி.ராஜா.
தருண்சுரேஷ்
UPDATED: Nov 11, 2024, 12:38:23 PM
திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடியில் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள ஹரித்ரா நதி என்று அழைக்கப்படும் தெப்பக்குளம் உலகத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றாகும்.
இந்தக் குளத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஏற்பாட்டில் சுமார் 8 அடி அகலத்தில் 1320 மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 40 லட்சம் மதிப்பில் அலங்கார தடுப்பு வேலிகள் அமைத்து நடைபாதைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
இந்தநிலையில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் தெப்பக்குளத்தில் படகு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
டி.ஆர்.பி.ராஜா
அவரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் மன்னார்குடி தெப்பக்குளத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலாத்துறை சார்பில் படகு இல்லம் அமைத்து தரப்படும் என சட்டமன்றத்தில் அண்மையில் சுற்றுலா வளர்ச்சி கழக துறை அறிவித்திருந்ததை தொடர்ந்து ரூ. 50 லட்சம் மதிப்பில் படகு இல்லம் அமைப்பதற்கான 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது
இதனை தொழில் முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார் விரைவில் படகு சவாரியை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்
அதனை தொடர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது மன்னார்குடி மக்களின் பாதாள சாக்காடை திட்டம் நீண்ட காலமான கோரிக்கையை அப்போது இருந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்ற தவறிவிட்டது தற்போது தமிழக முதல்வரின் ஆட்சியில் நகராட்சி துறை அமைச்சர் மன்னார்குடியில் பாதாளா சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொழிற்பேட்டை
பொதுவாக பாதாள சாக்கடை திட்டம் வேண்டாம் எனவும் இந்த திட்டத்தை ஆட்சியாளர்கள் காலம் கடத்திடுவாங்க என பொதுமக்கள் கூறினார்கள் அது வேற ஆட்சியில் தான் அந்த மாதிரி நடக்கும் இந்த திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் உடனுக்கு உடன் நிறைவேற்றபடும்
மன்னார்குடி சிறப்பை இன்னும் மேம்படுத்துவதற்காக பாதாள சக்கடை திட்டத்தை மும்முரமாக பணிகளை மேம்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார் டெல்டா மாவட்டத்தில் பாதுகாக்கபட்ட வேளாண்மை மண்டலத்தில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விவசாயிகள் நலன் கருதி விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை கொண்டு வரபடும்
விவசாயிகளுடைய பிள்ளைகள் படித்த இளைஞர்கள் மற்றும் படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்கபடும் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை அமைக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தானாக முன்வந்து நிலம் கொடுத்தால் வரவேற்போம் இல்லையெனில் அரசு நிலங்கள் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும் இடம் கிடைத்தால் நல்லது என தெரிவித்தார்.