- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருச்சி அருகே மின்சாரம் தாக்கி காவலர் உயிரிழப்பு.
திருச்சி அருகே மின்சாரம் தாக்கி காவலர் உயிரிழப்பு.
JK
UPDATED: Apr 15, 2024, 8:39:47 AM
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அடுத்துள்ள காவல்காரபாளையம், வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்.
இவர் திருச்சி சிபிசிஐடி காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார்.
இவரது வீட்டில் மராமத்து வேலைகள் நடந்து வருகிறது.
புதிதாக கட்டப்பட்ட சிமெண்ட் சுவற்று சுவருக்கு காலை தண்ணீர் விடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் மின்சார வயர் பட்டு இவர் மீது மின்சாரம் பாய்ந்தது இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதனை கண்ட குடும்பத்தினர் உடனடியாக அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் கார்த்திகேயன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த பெட்டவாய்த்தலை காவல்துறையினர் கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு