• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உத்தமபாளையம் வார்டு 5 திடீர் நகர் பகுதியில் புதிய மின் இணைப்பு வழங்க மின்சார வாரியம் அலட்சியப் போக்கு பள்ளி கல்லூரி குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்பு.

உத்தமபாளையம் வார்டு 5 திடீர் நகர் பகுதியில் புதிய மின் இணைப்பு வழங்க மின்சார வாரியம் அலட்சியப் போக்கு பள்ளி கல்லூரி குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்பு.

ராஜா

UPDATED: Aug 10, 2024, 6:31:14 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையம்

வார்டு 5 திடீர் நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2005 ஆண்டு சாலையோரங்களில் இருந்த வீடுகளை இடித்து அகற்றம் செய்து வழங்கப்பட்ட இடமாகும் எப்போது இருந்து சொத்துவரி விதிக்கப்பட்டு மக்களிடம் வசூல் செய்த வருகின்றனர்.

மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி சாக்கடை வசதி உப்பு தண்ணீர் மின்சாரம் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது உத்தமபாளையம் மின்சார வாரியத்தில் உள்ள செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு இந்த மக்களை வஞ்சிக்கும் விதமாக புதிய மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


District News & Updates in Tamil

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புதிய முன்னணிப்பு கேட்டு அலைந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி குழந்தைகள் இரவில் படிக்க முடியாமலும் இருளில் வாழும் ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உத்தமபாளையம் மின்சார வாரியத்தின் AD மற்றும் AE ஆகியோர் ஒரு சிலருக்கு மட்டும் மின்சாரம் வழங்குவது மற்றவர்களை தாசில்தார் அலுவலகம் சென்று NOC வாங்கிட்டு வா என அலைய விடுவது மாவட்ட ஆட்சியரிடம் சென்று NOC வாங்கிட்டு வா என்று அலைக்கழிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

Latest District News in Tamil

மேலும் மின்சார வாரியத்தின் புதிய மின் இணைப்பு பெற சொத்து வரி அல்லது பத்திரம் அல்லது பட்டா என அடிப்படை சாராம்சம் உள்ள நிலையில் சொத்து வரியை வைத்து புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்தால் உத்தமபாளையம் மின்சார வாரியம் புதிய மின் இணைப்பு வழங்குவது இல்லை. 

தமிழக அரசுக்கு இந்த இடம் தேவைப்படும் எனில் மின்சார வாரியத்திற்கு எந்தவித இழப்பும் இல்லை எனவும் மின்னிணைப்பு பெறுவோர் அதற்குரிய டெபாசிட் தொகையை செலுத்தி தான் மின்னிணைப்பு பெறுகின்றனர் மேலும் தங்கள் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்திற்கு மாதந்தோறும் மின்சார கட்டணத்தையும் செலுத்தி விடுகின்றனர்.

அப்படி இருக்கையில் மின்சார வாரியம் மின் இணைப்பு தர மறுப்பு தெரிவிப்பது ஏன் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

மின்சார வாரியம் 

தமிழக அரசு வழங்கக்கூடிய அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை கொடுக்க வேண்டிய இடத்தில் உள்ள மின்சார வாரிய ஊழியர்களே இவ்வாறு செய்வது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் மீது நம்பிக்கை இழக்கும் தன்மையை உருவாக்குகிறது. 

அதிகாரிகள் செய்யும் தவறுக்கு திமுக ஆட்சி மீது நம்பிக்கை இழக்கும் தன்மை உருவாகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மக்களுடன் முதல்வர் திட்டம் முதல்வர் தனிப்பிரிவு மாவட்ட ஆட்சியர் என அனைவரிடத்திலும் முறையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே உத்தமபாளையம் மின்சார வாரியத்தில் பணிபுரியும் செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகிய இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு திடீர் நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி: மின் இணைப்பு வேண்டி இரா. இராஜா

 

VIDEOS

Recommended