• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சேத்தியாத்தோப்பில் பரபரப்பான முக்கிய சாலை சந்திப்பில் புளிய மரத்தில் மின் கம்பி உரசி தீ விபத்து.

சேத்தியாத்தோப்பில் பரபரப்பான முக்கிய சாலை சந்திப்பில் புளிய மரத்தில் மின் கம்பி உரசி தீ விபத்து.

சண்முகம்

UPDATED: Oct 20, 2024, 7:36:42 AM

கடலூர் மாவட்டம்

சேத்தியாத்தோப்பு மேல்நிலைப்பள்ளி சாலை முகப்பில் சாலையோரமாக பழமையான புளியமரம் இருந்து வருகிறது. இந்த புளிய மரத்தின் அருகில் அதிக உயர அழுத்த மின்சாரம் செல்லும் மின் கம்பமும் இருந்து இதன் வழியாக பல இடங்களுக்கும் மின்கம்பிகள் இணைப்பில் மின்சாரம் செல்கிறது.

இவ்வாறான நிலையில் திடீரென மரம் மீது மின்கம்பி உரசி தீ பற்றியது. சிறிது நேரம் நீடித்தத்தீயானது பலரையும் அதிர்ச்சி அடைய வைப்பதாக இருந்தது. புளிய மரமும், மின்கம்பியும் அடிக்கடி உரசி கொண்டு தீ பிடிப்பது பல மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில் புளிய மரத்தை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Accident News 

ஆனாலும் அது நடப்பதாக தெரியவில்லை. மேலும் மின்கம்பமும் புளியமரம் நெருக்கமாக இருப்பதால் மின்கம்பி உரசி தீப்பற்றுவது தொடர் கதையாக இருக்கிறது. 

தற்போது மின் கம்பி உரசுவதால் ஏற்பட்ட தீயானது சில நிமிடங்கள் நீடித்து அதுவாக அணைந்தது. இந்தப் பகுதி பேருந்து நிலையப் பகுதியாகவும் அதிகமாக வாகனங்கள் செல்லும் பகுதியாகவும் மேலும் பள்ளிகள், செல்லும் சாலை வழியாகவும் இருந்து வருவதால் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே மின்கம்பத்தை உரசி வரும் பழமையான புளிய மரத்தை அகற்ற வேண்டும் என தெரிவித்த நிலையில் மாவட்ட நிர்வாகம் ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும் பழமையான புளிய மரத்தை அகற்று மறுக்கிறது.

 

VIDEOS

Recommended