• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • புவனகிரி அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் 200 ஏக்கருக்கு மேல் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத அவலம்.

புவனகிரி அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் 200 ஏக்கருக்கு மேல் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத அவலம்.

சண்முகம்

UPDATED: Oct 27, 2024, 1:44:12 PM

கடலூர் மாவட்டம்

புவனகிரி அருகே மேல் குறியாமங்கலம் கிராமத்தில் முருகன் கோவில் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் 200 ஏக்கருக்கு மேல் பாசனம் பெற்று வந்த நிலையில், தற்போது வாய்க்கால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் செல்ல வழி இல்லாததால் பாசனம் பெற்று வந்த வயல்கள் கட்டாந் தரையாகவும், மேய்ச்சல் நிலமாகவும் மாறிவிட்டது.

இதனைக் கண்ட இப்பகுதி விவசாயிகள் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் என பலரிடம் அலைந்தும் மனு மேல் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

விவசாயிகள் போராட்டம்

மேலும் இந்த வாய்க்கால் செல்லும் பகுதியானது பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி என இரண்டு பகுதிகளில் கலந்து வருவதால் இதனை தூர் வாருவதில் அதிகாரிகள் அக்கறை காட்ட வில்லை அலட்சியம் காட்டி வருகின்றனர்  முக்கியமாக வாய்க்கால் செல்லும் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டு வாய்க்காலின் தடமே இல்லாமல் போய்விட்டது.

இதனால் உடனடியாக வாய்க்காலை அளவீடு செய்து தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை எனில் இப்பகுதி விவசாயிகள் கிராம மக்களை திரட்டி மாபெரும் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் இப்பகுதி மக்கள் விவசாயிகளும் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

வாய்க்கால் ஆக்கிரமிப்பு

வழக்கம்போல இதனை சாதாரணமாக நினைக்காமல் விவசாயிகளின் வாழ்வாதாரமாக நினைத்து பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் நாங்கள் படும் அவஸ்தையை மனதில் நிறுத்தி அதிகாரிகள் தங்களுக்கு இந்த வாய்க்காலை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended