- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நாய்கள் கடித்து மான் பலி.
நாய்கள் கடித்து மான் பலி.
செ.சீனிவாசன்
UPDATED: Jun 13, 2024, 5:32:33 AM
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு மேற்கு திரௌபதிஅம்மன் கோவில் அருகில் இன்று காலையில் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து ஊருக்குள் புகுந்த மான் நாய்கள் துரத்தி கடித்து குதறியதால் பலியாகியுள்ளது.
பொதுவாக கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வன விலங்குகளுக்கு வைக்கப்படும் குடிநீர் தொட்டியில் குடிதண்ணீர் இல்லாத காரணத்தினால் தற்போது அங்கிருந்து வனவிலங்குகள் ஒவ்வொன்றாக குடிநீர் தேடி வெளியேறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் இன்று குடிநீர் தேடி வந்த மானை தெரு நாய்கள் கடித்துக் குதறி உள்ளதாக தெரிவிக்கின்றனர். இது போன்ற அசம்பாவிதம் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க கோடியக்கரை வனப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் வனத்துறையினர் குடிநீர் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாய்மேடு தீயணைப்புத் துறையினர் மானை மீட்டு கோடியக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு