- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கண் பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.05 லட்சத்தில் நவீன இசைக் கருவி வழங்கி நெகிழவைத்த சட்டமன்ற உறுப்பினர்.
கண் பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.05 லட்சத்தில் நவீன இசைக் கருவி வழங்கி நெகிழவைத்த சட்டமன்ற உறுப்பினர்.
ரமேஷ்
UPDATED: Aug 3, 2024, 11:00:31 AM
கும்பகோணத்தில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன், (45). இவருக்கு சிறு வயது முதல் இரண்டு கண்களும் தெரியாத பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவருக்கு ஆனந்தி, என்ற மனைவி அரவிந்த் சாய், ஜஸ்வந்த் சாய், என 2 மகன்கள் உள்ளனர்.
கல்விக் கற்காத சரவணன், கடந்த 20 ஆண்டுகளாக இசையை முறைப்படி கற்றுக்கொண்டு, இசைக் கருவியை வாடகைக்குப் பெற்று கோவில் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் இசை அமைத்து வருகிறார்.
எனினும் ஒரு நிகழ்ச்சிக்காக வாங்கும் தொகையில் பெரும் பகுதியை இசைக் கருவியின் வாடகைக்கே தந்துவிடுவதால் பிற செலவுகளை சமாளிக்க முடியாமல் சரவணன் சிரமப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அண்மையில், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம் தனது கஷ்டத்தைச் சொல்லி தனக்கு சொந்தமாக நவீன இசைக்கருவி வாங்க உதவிடும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ரூ.1.05 லட்சம் மதிப்பிலான ஹாண்ட் சோனிக் ரிதம் எனும் நவீன இசைக் கருவியை, சென்னையிலிருந்து தனது சொந்தப் பணத்தில் வாங்கி வரவழைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சரவணனிடம் வழங்கினார்.
அதை வாங்கிக் கொண்ட சரவணன், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சுதாகர், அரசு ஊராட்சி மன்ற துணை தலைவர் தமிழ்மாறன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.