• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டி திருச்சியில் திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்.

3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டி திருச்சியில் திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்.

JK

UPDATED: Jul 5, 2024, 11:48:23 AM

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிய சட்டங்களையே, இத்தனை ஆண்டுகளாக நாம் பின்பற்றி வந்தோம்.

இவற்றில், தற்போதைய காலத்துக்கு ஏற்ப புதிய மாற்றங்களை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாகவே கோரிக்கைகள் இருந்து வந்தன.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, 2014ல் பொறுப்பேற்ற பின், குற்றவியல் சட்டங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

பல்வேறு துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின், ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு மாற்றாக, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டு. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெற்றன.

இந்த குற்றவியல் நடைமுறை சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம், சாலை மறியல் என உட்பட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பாக திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திமுக வழக்கறிஞர்கள் அணி மத்திய மாவட்ட தலைவர் ஓம்.பிரகாஷ் தலைமையில் 100க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

VIDEOS

Recommended