இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் கட்டித்தர மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோபி பிரசாந்த்

UPDATED: May 1, 2024, 6:15:05 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் இலங்கை அகதிகள் முகாமில் காலி இடத்தில் புதிய வீடுகளை கட்டித்தரக்கோரி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

சின்னசேலம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு அளிக்கப்பட்டது.

இந்த அகதிகள் முகாமில் 71 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். நாங்கள் குடியிருப்பதற்காக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனம் மூலம் கட்டித்தரப்பட்ட வீடுகள் அபாயகரமான நிலையில் உள்ளது.

இதையொட்டி அகதிகள் முகாமில் புதிய வீடுகள் கட்டித்தர தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி, அப்பகுதியில் காலியாக உள்ள இடத்தில், 48 வீடுகளுக்கான கட்டுமான பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த இடத்திற்கு அருகாமையில் காலி இடங்கள் உள்ளன.

அவ்வாறு காலியாக உள்ள இடத்தில் மீதமுள்ள புதிய வீடுகளை கட்டாமல், நாங்கள் குடியிருக்கும் வீட்டை இடித்து விட்டு அங்கு புதிய வீடு கட்டுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்காக நாங்கள் தற்போது குடியிருக்கும் வீட்டினை காலி செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு செய்தால் எங்கள் வீடுகளில் வசிக்கும் முதியவர்கள், பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாவோம். எனவே, நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காலி இடத்தில் புதிய வீடுகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

VIDEOS

Recommended