• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஏரியிலிருந்து திருட்டு மண் கடத்த பயன்படுத்தபட்ட இரண்டு ஜேசிபி வாகனங்களை டீசல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய ஏ எஸ் பி

ஏரியிலிருந்து திருட்டு மண் கடத்த பயன்படுத்தபட்ட இரண்டு ஜேசிபி வாகனங்களை டீசல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய ஏ எஸ் பி

லட்சுமி காந்த்

UPDATED: May 9, 2024, 7:26:19 PM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றி உள்ள பகுதிகள், தொழில் வளர்ச்சியில் பல மாநிலத்தை காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகின்றது.

இங்கு பன்னாட்டு நிறுவனம் மற்றும் உள்நாட்டு நிறுவனம் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு ,குறு, பெரு தொழிற்சாலைகள் இருங்காட்டு கோட்டை, வல்லம் வடக்கால், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்குகின்றது.

இங்கு உள்ள தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். 

ஸ்ரீபெரும்புதூர் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நாள்தோறும் பல விதமான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு தேவையான கட்டுமான பொருட்கள் ,மணல் ,மண் , சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வதற்கு ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள செல்வாக்குப் படைத்த நபர்களுக்கு மத்தியில் கடுமையான தொழில் போட்டி எப்போதும் நிலவும்.

இந்தத் தொழில் போட்டி காரணமாக அடிதடி ,ஆள் ,கடத்தல் , பணம் கேட்டு மிரட்டல், கொலை ஆகியவையும் நடைபெற்று வருகின்றது.  

ஒருவரை காட்டிலும் மற்றொருவர் விலை குறைவாகவும் விரைவாகவும் சப்ளை செய்தால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதனால் பல செல்வாக்கு படைத்த நபர்கள் ஸ்ரீபெரும்புதூரை சுற்றிலும் உள்ள பகுதியில் இருந்து மண் மற்றும் மணல் கடத்தல் போன்ற தொழிலை வருவாய்க் துறையினர் மற்றும் காவல்துறையினரின் துணையுடன் செய்து வருகின்றார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன் என்பவர் கிராவல் மண் கடத்தலுக்கு துணை போவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகின்றது மண் கடத்தும் மாஃபியா கும்பல் இவருக்கு 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் அளிப்பதாகவும் உயர் அதிகாரிகளுக்கு இவர் கவனிக்க வேண்டும் எனவும் காவல்துறை வட்டத்தில் கூறப்படுகின்றது

மேலும் ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமனின் சகோதரர் மதுராந்தகம் பகுதியில் திமுக கட்சியின் ஒன்றிய செயலாளராக உள்ளதால் அமைச்சர்கள் மத்தியில் பரந்தாமனுக்கு தனி செல்வாக்கு உள்ளதாகவும்கவும் காவலர் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த குண்டு பெரும்பேடு பகுதியில் நேற்று இரவு கிராவல் மண் கடத்துவதாக ஏ எஸ் பி உதயகுமார் அவர்களுக்கு தகவல் வந்ததின் பெயரில் தனிப்பிரிவு காவலர் சுரேஷ் அவர்களிடம் விளக்கம் கேட்க அவர் கூறிய பதிலில் திருப்தி அடையாத ஏ எஸ் பி உதயகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார்.

அங்கு கிராவல் மண் கடத்த பயன்படுத்திய இரண்டு ஜேசிபிகள் இரண்டு லாரிகள் கண்டு அதிச்சியுற்ற உதயகுமார், மண் கடத்துவதற்கு இந்த ஜேசிபி வைத்து தானே பயன்படுத்துகிறீர்கள் .

இனிமேல் எப்படி இதை பயன்படுத்துவீர்கள் என பார்ப்போம் என ஆவேசமாக கேட்டுவிட்டு லாரியிலிருந்து டீசலை பிடித்து இரண்டு ஜேசிபிகள் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.

வெப்ப சலனம் காரணமாகவும் காற்று அதிகம் வீசப்பட்டதாகவும் இரண்டு ஜேசிபிகளும் மள மள மள வென தீப்பிடித்தது. மேலும் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வர உத்தரவிட்டார்.

தீ வைத்து கொளுத்தப்பட்ட ஒரு ஜேசிபி பாஞ்சாலம்பட்டு சரவணன் என்பவருக்கு சொந்தமானது என்றும் மற்றொரு ஜேசிபி கட்சி பட்டு பகுதியை சேர்ந்த அண்ட் ஏழுமலைக்கு சொந்தமானது என்றும், இரண்டு லாரிகள் விஆர்பி சத்திரம் பகுதியை சேர்ந்த நபருக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. 

மண் கடத்தலுக்கு உதவிய ஜேசிபி மற்றும் லாரி கிளீனர்கள் ,ஓட்டுநர்கள் என நான்கு பேர் கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். லாரியின் உரிமையாளர்களோ ஜேசிபி யின் உரிமையாளர்களோ இதுவரை கைது செய்யப்படவில்லை.

காவல் துறையினருக்கு லஞ்சத்தை கொடுத்து விட்டு கிராவல் மண் கடத்தலை மூன்று, நான்கு கும்பல்கள் செய்து வருகின்றார்கள்.

இவர்களுக்குள் ஏற்படும் தொழில் போட்டிக்காக ஒருவரை ஒருவர் காண்பித்துக் கொடுப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த தொழில் போட்டி காரணமாக பெரிய அசம்பாவிதம் , அது கொலையில் கூட போய் முடியும் என அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையில் பணிபுரிகின்ற காவலர்கள் அனைவரையும் வருடத்துக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்தால்தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது என பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.

மண் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு ஜேசிபிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதை காணும் போது, ஏ எஸ் பி உதயகுமார் அவர்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா அல்லது கடத்தல் பேர்வழிகள் திருந்த வேண்டும் என்ற காரணத்திற்காக ஜேசிபிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதா என தெரியவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

VIDEOS

Recommended