- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மாங்காடு அருகே பர்னிச்சர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து கம்பெனியை அகற்றுவதற்காக மர்ம நபர்கள் தீ வைத்தார்களா ?
மாங்காடு அருகே பர்னிச்சர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து கம்பெனியை அகற்றுவதற்காக மர்ம நபர்கள் தீ வைத்தார்களா ?
S.முருகன்
UPDATED: Sep 7, 2024, 7:06:38 AM
Latest Chennai News In Tamil
மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் இவர் கெருகம்பாக்கம், பி.டி. நகர், அண்ணாமலையார் தெரு பகுதியில சொந்தமாக கட்டில், மெத்தை, சோபா உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யும் பர்னிச்சர் கம்பெனி மற்றும் குடோன் செயல்பட்டு வருகிறது.
நேற்று இரவு ஊழியர்கள் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு சென்று விட்டனர். இன்று அதிகாலை திடீரென பர்னிச்சர் குடோனில் இருந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, விருகம்பாக்கம், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அனைத்தனர்.
Breaking News in Tamil
இதில் பர்னிச்சர் கம்பெனி மற்றும் குடோனில் இருந்த மூலப்பொருட்கள், மெஷின்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மெத்தை, சோபா, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு ரூ 50 லட்சம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த கம்பெனி செயல்பட்டு வந்ததாகவும் இதனை அகற்ற அந்த பகுதி மக்கள் ஏற்கனவே பலமுறை முயற்சி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது எனவே கம்பெனியை அகற்றுவதற்காக மர்ம நபர்கள் தீ வைத்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.