- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயருக்கு எதிராக துணை மேயர், திமுக உறுப்பினர்கள் பலர் கடும் விவாதம்
மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயருக்கு எதிராக துணை மேயர், திமுக உறுப்பினர்கள் பலர் கடும் விவாதம்
ரமேஷ்
UPDATED: Jul 25, 2024, 8:06:36 AM
கும்பகோணம் மாவட்டம்
கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், ரூபாய் 2 கோடியே 2 லட்சத்தி 68 ஆயிரத்தி 435 மதிப்பிலான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 11 தீர்மானங்களை இன்று கூட்டத்தில் மேயர் விவாத பொருளாக வைக்காத நிலையில், இதனை வைக்காததன் காரணத்தை கேட்டும், அதனை நிறைவேற்றிட துணை மேயர் மற்றும் திமுக உறுப்பினர்கள் பலர் எழுந்து ஆவேசமாக பேசிய நிர்பந்தித்த போதும், எதனையும் கண்டுகொள்ளாமலும் அதற்கு அடிபணியாமலும், சாதாரணமாக அதனை கையாண்டார், ஆனால் தொடர்ந்து துணை மேயர், திமுக மாமன்ற உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து இதையே வலியுறுத்திக் கொண்டிருந்தனர்.
திமுக மாமன்ற உறுப்பினர்கள்
ஒரு கட்டத்தில் துணை மேயர் சு ப தமிழழகன் பேசும் போது, உங்களை இந்த பதவி அமர வைத்த மாமன்ற உறுப்பினர்கள் நீங்கள் அனைவரும் கும்பிட வேண்டியவர்கள், மிக பெரிய நல்ல மனம் படைத்தவர்களால் இந்த மன்றம் நடந்து கொண்டிருக்கிறது வேறு பல ஊர்களில் மாமன்ற நடவடிக்கைகளை பார்த்தால் அங்கு பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டுள்ளது.
Latest Tamilnadu News Tamil
எங்களுடைய தலைவர் எங்களுடைய முதல்வர், கட்டளையிட்டதால் சகித்துக் கொண்டு இருக்கிறோம் ஆணையர் அளித்த 40 விவாதப் பொருட்களில் 29ஐ மட்டும் கூட்டத்தில் வைத்து விட்டு 11 பொருட்களை நிறுத்தி வைத்ததன் காரணத்தை சொல்லாமலும், அதனை நிறைவேற்ற கோரினால் அதனை நிறைவேற்ற மறுப்பதன் காரணமாகும் சொல்லாமல் இருப்பதன் அர்த்தம் புரியவில்லை, இதற்காக வேதனைப்படுகிறேன், வருத்தப்படுகிறேன், இதனை நிறைவேற்றினால் சந்தோஷம், இல்லை என்றால் இந்த பழி அவருக்கே என கூறியுடன் மேயர் கே சரவணன் தனது இருக்கையை விட்டு எழுந்து தனது அறைக்கு எழுந்து சென்றதால் மீண்டும் சபையில் கூட்டம் குறித்து கேள்வி எழுப்ப சர்ச்சை தொடங்கியது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிறிது நேரத்திற்கு பிறகு மேயர் தனது இருக்கை மீண்டும் வந்து அமர்ந்தார்
திமுக
அப்போது திமுக உறுப்பினர் எங்களை அவமதிக்கும் வகையில் அவையில் ஒன்றும் கூறாமல் கூட்டத்தை விட்டு வெளியேறுவது சரியா என்று கேட்டபோது நான் என்ன குழந்தையா பள்ளி மாணவனா நான் ரெஸ்ட் ரூம் போவதற்கு கூட உங்கள் அனுமதி கேட்டா போக முடியும் என்றார் மேயர் மேலும் அந்த 11 தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டபோது நான் அந்த பணிகளை விரைவில் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகே மன்ற பொருளாக விவாதத்திற்கு வைப்பேன் என்றும், என்னால் தற்போது நடைபெற்று வரும் பணிகளுக்கு பாதிப்பு இருக்காது என திட்டவட்டமாக கூறி கூட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்தார் இதனால் 2 மணி நேரமாக பரபரப்பாக நடைபெற்ற மாமன்ற கூட்டம் 11 பொருட்களைக் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றாமல் முடிந்ததால் துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு ஏமாற்றம் அடைந்தனர்