• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்.

மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்.

செந்தில் முருகன்

UPDATED: Jul 26, 2024, 6:08:04 AM

மயிலாடுதுறை மாவட்டம்

தமிழக அரசு சமீபத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்திய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த மின் கட்டண உயர்வு காரணமாக சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் வீடுகளின் மின் கட்டணம் உயர்வு ஏற்படுவதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவர்

இதனை பல்வேறு இயக்கங்கள் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்திவரும் நிலையில் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ். ஆர் ஜலபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேமுதிக

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக உயர்மட்ட குழு உறுப்பினர் என்.ஜாகிர் உசேன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். 

தொடர்ந்து மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் பாமாயில் பருப்பு வகைகளுக்கு தட்டுப்பாடு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், 

மின் கட்டண உயர்வு

மத்திய மாநில அரசு காவிரியில் இருந்து தண்ணீரை உடனடியாக பெற்று தர வேண்டியும் இவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

திமுக - அதிமுக - தேமுதிக - பாஜக - நாம் தமிழர் கட்சி - காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - தமிழக வெற்றிக் கழகம் - மதிமுக - அமமுக

VIDEOS

Recommended