• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ரமேஷ்

UPDATED: Aug 5, 2024, 10:03:14 AM

கும்பகோணம் 

அருகே திருவிடைமருதூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திமுக ஆட்சி அமைத்த உடன் 100 நாட்களில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிப்பேன் என்று வாக்குறுதி அளித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 1100 நாட்கள்கியும் இதுவரை அறிவிக்காமல் இருப்பது பெரும் ஏமாற்றமாக உள்ளதால் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற கோரியும்.

ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டத்தில் குருவை சாகுபடி பொய்த்துவிட்டதால் ஒரு ஏக்கருக்கு 30,000 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கிட கோரியும்.

பாட்டாளி மக்கள் கட்சி

தமிழக அரசு தொடர்ந்து ஒரே வருடத்தில் மூன்றாவது முறையாக அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கிலே நிறைவேற்ற வலியுறுத்தி திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ம.க. ஸ்டாலின், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற குழு தலைவர் பாட்டாளி மக்கள் கட்சி கவுரவ தலைவர் ஜி கே மணி, மாவட்ட துணை செயலாளர் ரவி ராஜ், ஒன்றிய செயலாளர்கள் கோபி, அறிவழகன், பந்தி பாபு, தம்பிதுரை பால. குமார், தமிழ்வேந்தன், ராகுல், ஹரி, மாவட்ட தலைவர் சங்கர்,

பாமக

தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, வன்னியர் சங்க மாநில செயலாளர்கள் வைத்தி, தங்க அய்யாசாமி, மகளிர் அணி செயலாளர் பானுமதி சத்யமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

 

VIDEOS

Recommended