• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

சுரேஷ் பாபு

UPDATED: Sep 24, 2024, 12:12:09 PM

திருவள்ளூர் மாவட்டம்

ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்றது.

சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கரிமுல்லா தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் எம். ராஜா, கே?சரவணன், ஏ.இப்ராஹிம், பி சரவணன், ஏ குமாரசாமி, பி மனோகரன், எஸ் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிஐடி மாவட்ட செயலாளர் கே ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்திட வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

சிஐடியு

விபத்தைக் காரணம் காட்டி ஓட்டுநரை கொலை குற்றவாளியாக்குவதை கைவிட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின் படி மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைத்திடவும் ஆட்டோ செயலியை உருவாக்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 

அதேபோல் பெட்ரோல், டீசல், கேஸ் ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் அளித்திட வேண்டும்.

பொதுமக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத அரசு அனுமதி இல்லாமல் இயங்கிடும் ராப்பிடடோ, ஓலா போன்ற பைக் டாக்ஸியை உடனடியாக தடை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Breaking News Today In Tamil 

மேலும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயில்வே மஸ்தூர் யூனியன் என்ற ஆட்டோ சங்கத்தில் உறுப்பினராக சேர்வதற்கு 2815-க்கு பதிலாக பத்தாயிரம் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய தொழிலாளர் சங்கத்தினர் இதனை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தனர். 

நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

 

VIDEOS

Recommended