- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
JK
UPDATED: Sep 12, 2024, 11:21:22 AM
திருச்சி மாவட்டம்
தரைக்கடை, தள்ளுவண்டி மற்றும் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Citu மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது 2014ம் ஆண்டு சாலையோர வியாபாரிகளின் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை கடை நடத்தும் இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை கைவிடவேண்டும்,
தள்ளுவண்டி வியாபாரிகள்
தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள், கடை நடத்தும் இடத்தில் வைத்து போட்டோ எடுத்து, அனைத்து வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், பி.எம்.ஸ்வா நிதி திட்டத்தில் தரைக்கடை வியாபாரிகளுக்கு வழங்க வேண்டிய கடன் தொகையை, கடந்த காலங்களில் தரைக்கடை வியாபாரிகள் அல்லாதவர்களுக்கு வழங்கியதைப் போல், தரைக்கடை நடத்தாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கூடாது,
கண்டன ஆர்ப்பாட்டம்
மாநகராட்சியின் அனைத்து பகுதியிலும் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, பின்னர் வாக்காளர் பட்டியல் வெளியிட்டு, வியாபாரிகள் சங்கத்தோடு கலந்து பேசிய பின்னர் தேர்தல் அறிவிப்யை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷ்டமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் செல்வி, சுரேஷ், அப்துல்லா ரத்தினம் உட்பட அப்துல்லா ரத்தினம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.