அடிப்படை வசதிகள் சரிவர செயல்படுத்தாத ஏர்வாடி ஊராட்சியைக் கண்டித்து போராட்டம் நடத்த முடிவு.

கார்மேகம்

UPDATED: Jun 28, 2024, 5:37:25 AM

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஏர்வாடி ஊராட்சியில் கடந்த ஏப்ரல் 19- ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே நிறுத்தப்பட்ட 100- நாள் வேலை இதுவரை திரும்ப தரப்படவில்லை

ஏர்வாடி ஊராட்சி அதற்குறிய பணியில் ஈடுபடாததையும் ஏர்வாடி தர்ஹா பகுதியில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்காததும் மற்றும் ரேஷன் கடையில் பொருட்கள் முறையாக வழங்காததை கண்டு கொள்ளாமலும் ரேஷன் பொருட்கள் வழங்கும் நேரத்தை சம்பந்தப்பட்ட  பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்க வலியுறுத்தியும் பிரசித்தி பெற்ற ஏர்வாடி தர்ஹா பகுதி சாலைகள் சேதமடைந்துள்ளதை சரி செய்ய வலியுறுத்தியும் போராட்டம் நடத்துவது என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

இந்த ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா குழு உறுப்பினர் நம்புராஜன் தலைமையில் நடைபெற்றது இக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட்  கட்சி தாலுகா செயலாளர் அம்ஜத்கான் பச்சமாள் சுப்ரமணியன் விவசாய சங்க மாவட்ட தலைவர் எம். முத்துராமன் ராமு விவசாய தொழிலாளர் சங்க தலைவர் நா. கலையரசன் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்

ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற 05/07/2024- ந்தேதி வெள்ளிக்கிழமை மேற்கண்ட அடிப்படை கோரிக்கைகளுக்காக ஏர்வாடி தர்ஹா பகுதியில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக நம்புராஜன் தெரிவித்துள்ளார். 

 

VIDEOS

Recommended