• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாசிகளுக்கு இலவச பாஸ் வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாசிகளுக்கு இலவச பாஸ் வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

சுந்தர்

UPDATED: Jul 30, 2024, 8:09:00 PM

சுங்கச்சாவடி

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது மேலும் சுங்கச்சாவடி அமைந்திருக்கும் பகுதிகளில் வசிக்கக்கூடிய உள்ளூர் மக்கள் கட்டணமின்றி சுங்கச்சாவடிகளில் பயணம் செய்யலாம் எனவும் 

உள்ளூர் வாசிகள் ஆதார் கார்டை காண்பித்தால் இலவச பாஸ் பெறலாம் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதாக கூறி மணல் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் யுவராஜ் தலைமையில் 20 க்கும் மேற்பட்டோர் வானகரத்தில் உள்ள சுங்கச்சாவடி அலுவலகம் முன்பு உள்ளூர் வாசிகளுக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து நூதன முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

District News & Updates in Tamil

இந்த நிலையில் சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேசி அவர்களிடம் ஆதார் கார்டுகளை வாங்கி இலவச பாஸ்க்கு பதிலாக 50 சதவீத சலுகை கட்டணம் என்ற பாசை வழங்கினார்கள் இதுகுறித்து யுவராஜ் அளித்த பேட்டியில் : 

மத்திய போக்குவரத்து துறை மந்திரி கொடுத்த வாக்குறுதி இப்பொழுதுதான் நிறைவேறி உள்ளது.

சுங்கச்சாவடிகளில் ஆதார் கார்டு காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம் என்ற வீடியோ வைரலாகி வருகிறது

Latest District News in Tamil

இந்த திட்டம் சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்று கூறியுள்ளனர்

அப்படி இருக்கும்போது இதுவரை நாங்கள் கூடுதலாக கட்டிய பணத்தை திருப்பி தருவார்களா எம்பிக்களை குசிபடுத்துவதற்காக சுங்கச்சாவடிகளை எடுத்து விடுவேன் என மத்திய அமைச்சர் கூறிய வருகிறார்.

நாங்கள் தற்போது வாங்கியது போல் பொதுமக்கள் முதலில் சுங்கச்சாவடிகளில் உள்ளூர் பாஸ்களை வாங்கிக் கொள்ளுங்கள் இலவசம் என கூறிவிட்டு 60 கிலோமீட்டர் எல்லைக்குள் செல்வதற்கு 50 சதவீத கட்டண சலுகையில் கொடுத்துள்ளனர்.

மத்திய அமைச்சர் கூறியது இலவச பஸ் ஆனால் தற்போது கொடுப்பது 50 சதவீத கட்டணம் சலுகைக்கான பாஸ் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended