- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சிதம்பரம் புதிய பேருந்து நிலையம் ஆமை வேகத்தில் நடைபெறுவது ஏன் ?
சிதம்பரம் புதிய பேருந்து நிலையம் ஆமை வேகத்தில் நடைபெறுவது ஏன் ?
சண்முகம்
UPDATED: Jul 31, 2024, 5:29:54 AM
கடலூர் மாவட்டம்
சிதம்பரத்தில்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஞ்சபூத ஸ்தலங்களில் சிதம்பரம் ஆகாய ஸ்தலமாக விளங்குகிறது சிதம்பரம் ஒரு ஆன்மீக பூமியாகவும் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் நவகிரக கோவிலுக்கு செல்லும் வழியாகவும் உள்ளது
இங்கு தினசரி 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் அருகாமையில் உள்ள நாகை மாவட்டத்திற்கு செல்வதற்கும் சிதம்பரம் வழியாக தான் செல்கிறார்கள்.
சிதம்பரம்
சிதம்பரத்தில் மிகவும் நெருக்கடியான பகுதியாக மாறியதால் சிதம்பரம் அருகில் உள்ள லால்புரம் சிதம்பரம் புறவழி சாலையில் 7 ஏக்கர் பரப்பளவில் சிதம்பரம் புதிய பஸ் நிலையம் சென்ற ஆண்டு 5ம் மாதம் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது
ஒரு ஆண்டுகளாக பத்து சதவீதம் கூட வேலை நடைபெறவில்லை பேஸ் மட்டம் போட்டதுடன் உள்ளது பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது
15 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் புதிய பஸ் நிலையம் 54 பஸ்கள் நிற்பதற்கும் 46 கடைகள் கட்டப்படுகிறது புதிய பஸ் நிலையம் மிகவும் தாழ்வான பகுதியில் உள்ளதால் ஒன்றரை மீட்டர் உயரம் பஸ் நிலையம் உயர்த்த வேண்டி உள்ளது.
சிதம்பரம் பேருந்து நிலையம்
15 கோடியில் கட்ட முடியாது என்றும் மேல்கொண்டு ஒன்பது கோடி ரூபாய் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது
செய்தியாளர்கள் அங்கே சென்று பார்த்த பொழுது 10 பேருக்கு குறைவானவர்கள் தான் வேலை செய்கிறார்கள் இதுவரை இரண்டு கலெக்டர்கள் வந்து பார்வையிட்டும் எந்தவிதமான பணியும் வேகமாக நடைபெறவில்லை.
Cuddalore News Today Live
அந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டால் சிதம்பரத்தில் போக்குவரத்து சிரமம் இல்லாமல் பொதுமக்கள் சென்று வரலாம் ஆனால் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது
5 ஏக்கர் பஸ் நிலையத்திற்கும் இரண்டு ஏக்கர் சுற்றுவட்டார பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.