- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மங்களூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டத்தில் காரசார விவாதம்.
மங்களூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டத்தில் காரசார விவாதம்.
மைக்கேல்
UPDATED: Jun 28, 2024, 8:19:07 AM
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட மங்களூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் கே எம் டி சுகுணா சங்கர் தலைமையில் நடைபெற்றது.
வட்டார ஊராட்சி அலுவலர் வீரங்கன் மற்றும் கிராம ஊராட்சி அலுவலர் தண்டபாணி முன்னிலையில் கூட்டமானது வெகு சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்தில் மங்களூர் வட்டாரத்துக்கு உட்பட்ட கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் என்ன தேவையென்று காரசாரமாக விவாதித்தனர்.
குறிப்பாக மேலாதனுர் கவுன்சிலர் ராமச்சந்திரன் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குமாரை முதல் நிதிநத்தம் வரை செல்லும் சாலை சிதலமடைந்துள்ளது அவற்றை புதுப்பித்து புதிய தார் சாலை அமைத்திடவும் ,
இப்பகுதியில் உள்ள மக்கள் மயானங்களுக்குச் செல்ல ஓடையை கடந்து செல்வதால் அங்கு மழைக்காலங்களில் நீர் பெருக்கேற்று ஓடுவதால் இறந்தவர்களின் உடலை புதைக்க தண்ணீரில் மிதந்து கடந்து சென்று அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் அதன் காரணமாக ஓடைப்பாலம் அமைத்திடவும்,
மேல்ஆதனூரில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றிடமும் இக்கூட்டத்தில் குறிப்பிடும்படி விவாதிக்கப்பட்டது. முடிவில் மேலாளர் சக்திவேல் நன்றி உரை கூறினார்.
படவிளக்கம்.
மங்களூர் வட்டார அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.