- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஊராட்சி வார்டு பெண் உறுப்பினரின் ராஜினாமா கடிதத்தை அவரது கணவர் வழங்கியதை திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாங்கியதால் சர்ச்சை
ஊராட்சி வார்டு பெண் உறுப்பினரின் ராஜினாமா கடிதத்தை அவரது கணவர் வழங்கியதை திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாங்கியதால் சர்ச்சை
தருண்சுரேஷ்
UPDATED: Jun 19, 2024, 6:22:24 PM
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் மணலி கிராம ஊராட்சியில் கடந்த வாரம் ஊராட்சி நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை எனவும் பல்வேறு குளறுபடிகள் - ஊழல்கள் நடைபெற்று வருவதாக கூறி 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ராஜினாமா கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர்.
மணலி கிராம ஊராட்சியில் ஒரு வார்டில் பெண் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருக்கும் நிலையில் அவருடைய கணவர் தன்னுடைய மனைவியின் ராஜினாமா கடிதத்தை திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்திருப்பது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
கண்டனத்திற்குரிய இந்த செயல் ஏற்றுக்கொள்ளப்படுமா? அல்லது அரசியலமைப்புச் சட்டத்தில் பெண் ஊராட்சி மன்ற உறுப்பினரின் ராஜினாமா கடிதத்தை அவருடைய கணவர் கொடுக்கும் பட்சத்தில் அரசு அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளலாமா? அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளதா?
பெண் ஊராட்சி மன்ற உறுப்பினரின் ராஜினாமா கடிதத்தை ஆண் வழங்கும் போது அதை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்து பெற்றிருக்க வேண்டாமா? இது மக்களாட்சி தத்துவத்திற்கே எதிரானது இல்லையா? இது திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்களிடம் புகார் மனு வாங்குவது போல் கண்மூடித்தனமான நடவடிக்கையையே பிரதிபலிக்கிறது.
என பல்வேறு கோணங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார் பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதியின் ராஜினாமா கடிதத்தை அவருடைய கணவர் கொடுத்ததை திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாங்கியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.