- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
லட்சுமி காந்த்
UPDATED: Jun 21, 2024, 4:47:58 AM
ஜாதி மறுப்பு திருமணத்தை நடத்தியதற்காக கொலை வெறியோடு திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகத்தை தாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி காஞ்சிபுரம் ஆலடிகேட் பகுதியில், மாநகர குழு தோழர் G.லஷ்மிபதி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு தோழர் இ.முத்துக்குமார், மாவட்ட செயலாளர் சி.சங்கர், மாவட்ட செயற்குழு கே.நேரு, ஆகியோர் கலந்து கண்டு சிறப்புரையாற்றினர்.
இ முத்துக்குமார் அவர்கள் பேசும்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவுடிகளால் தாக்கப்பட்டது. ஜாதி மறுப்பு திருமணத்தை கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தியதற்காக பழி வங்கும் படலத்துடன் அலுவலகத்தை தாக்கிய குண்டர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சி ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தான் இயங்கி வருகிறது என்றும்,
நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் , பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் என்பதை வலியுறுத்தி தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கே ஜீவா, ஜிஎஸ்.வெங்கடேசன், சி. மகேந்திரன், ஆர். சேகர், எம்.சூரியபாரதி, இ. சங்கர் , இ.சம்பத் ஆகிய தோழர்கள் முன்னிலை வகுத்தனர்.
மாவட்ட செயற்குழு ஆர்.மதுசூதன் , ஆர். சௌந்தரி, வட்ட செயலாளர்கள் எஸ்.பழனி, மாவட்ட குழு எஸ்.புவனேஸ்வரி , எஸ் உதயகுமார் எஸ்.சீனிவாசன் உள்ளிட்ட தோழர்களும் மாநகர குழு ஒன்றிய குழு தோழர்களும் கலந்து கொண்டனர்.