- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பழவேற்காடு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர்
பழவேற்காடு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர்
L.குமார்
UPDATED: Jun 17, 2024, 6:39:03 AM
திருவள்ளூர் மாவட்டம் ,பழவேற்காடு அடுத்த எடமணி கிராமத்தில் வசிப்பவர் சம்பத் பழவேற்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணி செய்து வருகிறார்.
வழக்கம்போல் இன்று காலை இடமணி கிராமத்தில் இருந்து பசியாவரம் மேம்பாலம் வழியாக பழவேற்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.
வாகனத்தில் மோதப்பட்டு தூக்கி எறியப்பட்ட சம்பத் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து கிராம மக்கள் அப்பகுதிக்கு வந்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் விரைந்து வந்த திருப்பாலைவன காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிசிடிவி கேமரா பதிவை கொண்டு மோதிய வாகனத்தை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பொன்னேரி பழவேற்காடு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
பசியாவரம்-பழவேற்காடு இடையே மேம்பால பணிகள் முடிவுராத நிலையில் தொடர்ந்து இதுபோன்று விபத்துக்கள் அப்பகுதியில் நடந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு