மனித கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் கைகளால் அள்ளும் அவலம்.

ராஜா

UPDATED: May 26, 2024, 8:50:55 AM

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி பேரூராட்சியில் மனித கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் கைகளால் அள்ளும் அவலம் நீடித்து வருகிறது.

தேவதானப்பட்டி பேரூராட்சியில் சுய குழு உதவி துப்புரவு பணியாளர் அமாவாசை, சுப்பிரமணி, இரண்டு நபர்களையும் தேவதானப்பட்டி பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பால்பாண்டி என்பவர் இரண்டாவது வார்டு கள்ளர் ஸ்கூல் அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் சிறுநீர் மற்றும் மலம் மற்றும் மனித கழிவுகள் கலந்து வரும் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சுத்தம் செய்ய எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காமல், அடைப்பை வெறும் கையால் சுத்தம் செய்ய வைத்துள்ளார்.

இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதனால் அகற்றக்கூடாது என்ற 2013இல் தடை சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது.

இச்சட்டம் நடைமுறையில் இருக்கும் பொழுது, துப்புரவு பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திக் கொண்டு வருவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே உடனடியாக இந்த சட்டத்தின்படி பணியில் அமர்த்திய அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் இது போன்று மனித கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் கைகளால் அள்ளும் அவலத்தை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIDEOS

Recommended