• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கோடைகால விளையாட்டு முகாமில் கலந்து கொள்ளும் பிள்ளைகளுக்கு தோழர்கள் நடைபயிற்சி சங்கம் சார்பாக காலை மாலை சத்தான உணவு வழங்கப்பட்டது.

கோடைகால விளையாட்டு முகாமில் கலந்து கொள்ளும் பிள்ளைகளுக்கு தோழர்கள் நடைபயிற்சி சங்கம் சார்பாக காலை மாலை சத்தான உணவு வழங்கப்பட்டது.

சுரேஷ் பாபு

UPDATED: May 12, 2024, 4:06:12 PM

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கோடைகால விளையாட்டு முகாமில் கலந்து கொள்ளும் பிள்ளைகளுக்கு சத்து உணவு வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கவும் விதமாகவும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் கோடைகால விளையாட்டு முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு காலை மாலை பச்சை வாழைப்பழம், நவ தானிய பருப்பு வகைகள் அவிச்ச முட்டை, பாதாம் ,பிஸ்தா,முந்திரி, உலர் பேரிச்சை பழம், பாதாம் பால், ஆகியவற்றை கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டில் முகாமல் கலந்து கொள்ளும் மாணவர்கள் சத்தான உணவுகளுக்கு பெற்றுக் கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு பல சாதனைகளை புரிவோம் என்று தெரிவித்தனர்

இந்த நிகழ்ச்சி முழுவதையும் திருவள்ளூர் மாவட்ட தோழர்கள் நடைப்பயிற்சி சங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended