• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க கூட்டு பணிக்குழு கூட்டத்தை நடத்த மத்திய மந்திரிக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க கூட்டு பணிக்குழு கூட்டத்தை நடத்த மத்திய மந்திரிக்கு முதலமைச்சர் கடிதம்

கார்மேகம்

UPDATED: Jun 27, 2024, 4:45:23 AM

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 47 பேரை மீட்க கூட்டு பணிக்குழு கூட்டத்தை உடனே நடத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்

(மத்திய மந்திரிக்கு கடிதம்)

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி உள்ளார் அதில் கூறியிருப்பதாவது கடந்த 25- ந் தேதி அன்று விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது மிகுந்த வேதனை அளிக்கிறது இந்த ஆண்டில் (2024) மட்டும் இதுவரை இலங்கைக் கடற்படையினரால் 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் 27 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன ( கூட்டுப் பணிக்குழு கூட்டம் )

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இது போன்று அடிக்கடி கைது  செய்யப்படுவது தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது

எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இது போன்று கைது செய்யப்படுவதைத் தடுக்கவும் 

தற்போது இலங்கை சிறையில் இருந்துவரும் 47 மீனவர்களையும் 166 மீன்பிடி படகுகளையும் விடுவித்திட கூட்டு பணிக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு தேவையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

VIDEOS

Recommended