உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலித்தில் மரக்கன்றுகள் நடும் விழா.

சுரேஷ் பாபு

UPDATED: Jun 5, 2024, 10:29:11 AM

ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 ஆம் நாள் உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடம் "நில மீட்டெடுப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைத் தாங்கும் திறன்" என்ற மையக்கருத்தில் உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் பல்வேறு சுற்றுச் சூழல் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட கலெக்டர். த.பிரபுசங்கர், தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் பங்கேற்ற தொழிற்சாலை பணியாளர்கள் சாரண சாரணியர் மற்றும் பொது மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மஞ்சபையுடன் மரக் கன்றுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

மேலும், மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம், பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை தாங்கும் திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் சாரண சாரணியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு நடை பேரணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் காமராஜர் சிலை வரை நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ப.ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள்,சு.அருண்குமார், கா.கயல்விழி, உதவிபொறியாளர்கள் கி.ர.ஶ்ரீலேகா மற்றும் சு.சபரிநாதன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

VIDEOS

Recommended