• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மத்தியஅரசின் புதிய மூன்று குற்றவியல் சட்டதிருத்தத்தை வரவேற்று பாஜக வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மத்தியஅரசின் புதிய மூன்று குற்றவியல் சட்டதிருத்தத்தை வரவேற்று பாஜக வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

JK

UPDATED: Jul 1, 2024, 6:25:22 PM

திருச்சியில் பாஜக, ஹிந்து முன்னணி, ஏ பி பி எஸ் அமைப்பு வழக்கறிஞர்கள் இன்று திருச்சி நீதிமன்றத்தின் இரண்டாவது வாயில் முன்பு புதிதாக அமலுக்கு வந்துள்ள மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்களை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் முத்துமாணிக்கவேலன் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மூன்று சட்ட திருத்தங்கள் இன்று முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த கணினி உள்ளிட்ட அனைத்து சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு இன்றைய தினம் தமிழகத்திலும் சட்ட திருத்தங்கள் அமலுக்கு வந்துள்ளது. 

120 ஆண்டுகளாக இருந்த பழைய சட்டங்களை தற்போது மாற்றி அமைத்து முக்கிய பிரிவுகளை உட்படுத்தி அதிகமாக இருந்த பிரிவுகளையும் குறைத்தும் தண்டனைகளை அதிகப்படுத்தியும் சட்டங்கள் இன்று அமலுக்கு வந்துள்ளது.

வழக்கறிஞர் சங்கங்களில் ஒரு அமைப்பு இதனை வரவேற்றுள்ளது. மற்றொரு அமைப்பு எதிர் நடவடிக்கையில் மேற்கொண்டுள்ளனர்.

இன்று அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் வழக்கம் போல பணியை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கறிஞர்களும் பொதுமக்களும் இதனை வரவேற்கின்றனர்.

இந்தச் சட்டத்தில் அதிக தண்டனையும், அதிக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதால் குற்றங்கள் குறைந்த அளவே நடைபெறும் என்பது சாத்தியமாகும் என தெரிவித்தார்.

திருச்சியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் புதிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் வேளையில் பாஜக மற்றும் அதன் கிளை அமைப்புகள் மற்றொரு பகுதியில் இனிப்பு வழங்கி கொண்டாடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

VIDEOS

Recommended