திருவாரூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு.

ஜெயராமன்

UPDATED: Apr 27, 2024, 6:48:06 PM

திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று திருச்சியை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் திருவாரூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் வைத்திருந்த பைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்தினர்.

மேலும் ரயில் நிலையத்தில் உள்ள கடைகள் ,பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோன்று ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு கருவிகள் உரிய முறையில் பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தபோது பல ஆண்டுகளாக செயலிழந்த தீயணைப்பு கருவிகள் இருந்தது தெரிய வந்தது.

உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு கருவிகள் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என அவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

இந்த வெடிகுண்டு நிபுணர்களின் சோதனை ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் திடீர் திடீரென நடத்தப்படும் எனவும் சாதாரணமாக நடத்தப்படும் இந்த சோதனை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் பயணிகள் அச்சம் அடைய தேவை இல்லை எனவும் போலீசார் விளக்கம் அளித்தனர்.

திருவாரூர் ரயில் நிலையத்தில் திடீரென வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கொண்டு திடீர் சோதனை செய்த சம்பவம் பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended