தொண்டி அருகே நடுக்கடலில் கவிழ்ந்த படகு.

கார்மேகம்

UPDATED: Aug 23, 2024, 8:06:30 AM

இராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் மாணிக்கம் ( வயது -35 திருவேலன் ( வயது-35 மற்றும் 16 - வயது சிறுவன் ஆகிய 3 பேரும் நாட்டுப் படகில் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்

இவர்கள் சென்ற படகு சுமார் 10 கடல் மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியதால் திடீரென கடலில்படகு கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது உடனே மீனவர்கள் 3 பேரும் படகை பிடித்துக் கொண்டு கடலுக்குள் தத்தளித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது

மீனவர்கள்

நீண்ட நேரமாகியும் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 3 பேரும் கரை திரும்பாததால் நம்புதாளை மீனவர்கள்  இது தொடர்பாக தொண்டி கடற்கரை காவல் நிலையம் மீன்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

( மீட்பு) 

தொடர்ந்து கடலோர காவல் படையினர் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர் மேலும் நம்புதாளை மீனவ கிராமத்தினரும் படகுகளில் கடலுக்குசென்று மீனவர்களை தேடினர்

இந்நிலையில் நேற்று காலை கடலில் கவிழ்ந்த படகு மீனவர்களை கண்டுபிடித்தனர் தொடர்ந்து கடலுக்குள் மாயமான 3 மீனவர்கள் மற்றும் படகை பத்திரமாக மீட்டு நம்புதாளை கடற்கரைக்கு கொண்டு வந்தனர்

இச் சம்பவத்தால் நம்புதாளை கிராமத்தில் பரபரப்பு நிலவியது.

 

VIDEOS

Recommended