• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா முன்னிட்டு பூப்பந்தாட்ட போட்டி.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா முன்னிட்டு பூப்பந்தாட்ட போட்டி.

ரமேஷ்

UPDATED: Aug 31, 2024, 12:10:41 PM

கும்பகோணம்

அருகே திருவிடைமருதூர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா முன்னிட்டு திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் இணைந்து நடத்தும் பூப்பந்தாட்ட போட்டி தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக மாநில பொதுச் செயலாளர் எழிலரசன், தலைமையில் திருவாடுதுறை ஆதினம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 

இதில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சிவகுமார், தடகள சங்க துணை தலைவரும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முத்துச்செல்வம், முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், பூப்பந்தாட்ட போட்டி மாநில தலைவர் நடேசன், மாநில பொருளாளர் பார்த்திபன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், திருவாடுதுறை ஆதினம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானமூர்த்தி, திருவிடைமருதூர் பேரூராட்சி துணைத்தலைவர் சுந்தரஜெயபால், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Latest Political News

இந்த போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் சுந்தர் தொடக்கி வைத்தார். இந்த போட்டியில் தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி, ஈரோடு, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட 28 மாவட்டத்திலிருந்து 280 மாணவர்கள், 220 மாணவிகள் கலந்து கொண்டனர்.

Latest Kumbakonam District News

இந்த போட்டியில் 14 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி இன்று நாளையும் நடைபெறுகிறது. வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெற்ற அணியினர் அடுத்த மாதம் ஹரியானாவில் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.

 

VIDEOS

Recommended