- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மத்திய அரசின் புதிய மாற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை கண்டித்து திருச்சியில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு உண்ணாவிரத போராட்டம்
மத்திய அரசின் புதிய மாற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை கண்டித்து திருச்சியில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு உண்ணாவிரத போராட்டம்
JK
UPDATED: Jul 1, 2024, 6:34:19 PM
பிரிட்டிஷ் காலத்து இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய முறையே பாரதிய நியாய சன்ஹிதா , பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
முந்தைய NDA அரசாங்கத்தால் இயற்றப்பட்ட புதிய சட்டங்கள் இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் இத்துடன் முடிவுக்கு வருகின்றன.
காவல் நிலையத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் புகார் வழங்கவும் இந்த சட்டங்கள் வழிவகை செய்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சிஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிய சட்டங்களையே, இத்தனை ஆண்டுகளாக நாம் பின்பற்றி வந்தோம்.
இவற்றில், தற்போதைய காலத்துக்கு ஏற்ப புதிய மாற்றங்களை செய்ய வேண்டும் என, பல ஆண்டுகளாகவே கோரிக்கைகள் இருந்து வந்தன. பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, 2014ல் பொறுப்பேற்ற பின், குற்றவியல் சட்டங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது.
பல்வேறு துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின், ஆங்கிலேய காலத்து சட்டங்களுக்கு மாற்றாக, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன.
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதினியம்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் பெற்றன. இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
இதனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் இன்று நடைமுறைக்கு வந்துள்ள அந்த முப்பெரும் சட்டங்களில் உள்ள இடர்பாடுகள் சம்பந்தமாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடனும் அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் ஒப்புதலுடனும் இந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தின் தொடர்ச்சியாக நாளை அனைத்து நீதிமன்றங்கள் முன்பாக ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் அதேபோல 3ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் ஜேக் பொதுக்குழு கூட்டத்தின் அடிப்படையில் மாநிலம் தழுவிய அனைத்து வழக்கறிஞர்களும் திருச்சியில் ஒன்று கூடி ஒரு பேரணியை நடத்தி இந்த கருத்தை மீண்டும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு வழக்கறிஞர் நோக்கத்தையும், பொதுமக்களின் நோக்கத்தையும் இந்த சட்டத்தில் உள்ள நீதித்துறை வழக்கறிஞர் பொதுமக்கள் காவல்துறைக்கு இடையே உள்ள இடர்பாடுகளை ஏற்பத்திருப்பதற்காக இந்த போராட்டம் நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், ஜாமீன் மற்றும் ஒரு சில முக்கிய வழக்குகளுக்கு நாங்கள் அதற்கு தளர்வுகள் கொடுத்துள்ளோம் அந்த தொடர்புகள் மூலம் அந்த வழக்காடிகளுக்கு பொதுமக்களுக்கும் எந்த பாதிப்பும் வராது என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம் என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கதுரை, கென்னடி, பானுமதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.