• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • முடிச்சூர் வெளிவட்ட சாலைகள் சந்திப்பில், அணுகு சாலையோரத்தில் மூட்டை மூட்டையாக குப்பை கொட்டி எரிப்பதால்,  சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்.

முடிச்சூர் வெளிவட்ட சாலைகள் சந்திப்பில், அணுகு சாலையோரத்தில் மூட்டை மூட்டையாக குப்பை கொட்டி எரிப்பதால்,  சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 6, 2024, 4:35:59 AM

காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர் ஊராட்சியின் வெளிவட்ட சாலையின் அணுகு சாலை ஓரத்தில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவது, செப்டிக் டேங்க் கழிவுநீரை ஊற்றுவது போன்றவை தொடர்ந்து வருகின்றன. இதை யாரும் கண்டுக்கொள்வதில்லை. 

இந்த நிலையில், மூட்டை மூட்டையாக குப்பையை எடுத்து வந்து, சாலையோரத்தில் கொட்டி எரிக்கும் சம்பவம் சமீப நாட்களாக அதிகரித்துள்ளது.

தினந்தோறும் காலையிலும் மாலையிலும், மர்ம நபர்கள் சிலர், வாகனங்களில் மூட்டை மூட்டையாக குப்பையை எடுத்து வந்து, சாலையோரத்தில் கொட்டி எரித்தனர். இதனால், அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கண் எரிச்சலாலும், மூச்சு திணறலாலும் பாதிக்கப்பட்டனர். கடும் துர்நாற்றமும் வீசியது.

இதை கட்டுப்படுத்தாவிட்டால், அணுகு சாலை முழுதும் குப்பை மேடாக மாறும் அபாயம் உருவாகி வருவதாக, அப்பகுதியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களுக்கு முன்பு ஊராட்சி சார்பில் இங்கே குப்பை கொட்ட கூடாது என பெயர் பலகை வைக்கப்பட்டது. அந்த பெயர் பலகையில் எழுத்துக்கள் உள்ள வர்ணங்கள் மங்கி பெயர்ப்பலகை வெறுமனே காணப்படுவதால் தான் இங்கே கோழி கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை கொட்டி எரிக்கப்படுவதாக அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

 

VIDEOS

Recommended