- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ராமநாதபுரம் ரெயில்வே மேம்பாலத்தை தேர்தல் முடிவுக்கு பின் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்.
ராமநாதபுரம் ரெயில்வே மேம்பாலத்தை தேர்தல் முடிவுக்கு பின் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்.
கார்மேகம்
UPDATED: Apr 24, 2024, 11:46:17 AM
இராமநாதபுரம் கீழக்கரை ரெயில்வே கேட் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தை தேர்தல் முடிவுக்கு பின்னர் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
ராமநாதபுரம் கீழக்கரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரெயில்வே சாலை மேம்பாலம் அமைக்க நில ஆர்ஜிதத்திற்கு ரூ. 5.14 கோடி கட்டுமான பணிகளுக்கு ரூ. 25.60 கோடி என மொத்தம் ரூ.30.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மேம்பாலமானது மொத்தம் 719. 60 மீட்டர் நீளத்திலும் 12 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம் 5.50 மீட்டர் அகலம் அமைக்கப்பட்டு உள்ளது
கடந்த 2018 ம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட இந்த பால பணிகள் பல்வேறு காரணங்களினால் தாமதமான நிலையில் பின்னர் சாலையின் இருபுறங்களிலும் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு பாலம் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன
பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பகுதியில் சாலையின் இருபுறமும் பாலத்திற்கான தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது இது தவிர ரெயில்வே தண்டவாள பகுதியில் இருபுறமும் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது.
பாலத்திற்கான கட்டமைப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விளக்கு வசதிகள் மின்சார வசதி தண்ணீர் வெளியேறும் வசதி பெயிண்ட் அடிக்கும் பணி என அனைத்து பணிகளும் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன
ALSO READ | சிலிண்டர் சோதனை இனி இலவசம்.
90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கட்டமைப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட சாரங்கள் உள்ளிட்டவைகள் மட்டும் அகற்றப்படாமல் உள்ளது.
இந்நிலையில் சில நாட்களில் அனைத்து பணிகளையும் முடித்து தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல் பணியாக இந்த பாலத்தினை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வந்த மக்கள் அவதிக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்க போகிறது என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.