- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ராமநாதபுரத்தில் விஷம் வைத்து கொல்லப்படும் நாய்கள் நடவிடிக்கை எடுக்க விலங்குகள் ஆர்வலர்கள் கோரிக்கை.
ராமநாதபுரத்தில் விஷம் வைத்து கொல்லப்படும் நாய்கள் நடவிடிக்கை எடுக்க விலங்குகள் ஆர்வலர்கள் கோரிக்கை.
கார்மேகம்
UPDATED: Sep 16, 2024, 10:10:01 AM
இராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது நாய்களின் தொல்லையை பொறுக்க முடியாமல் சிலர் விஷம் வைத்து நாய்களை கொன்று வருகின்றனர்
( தெரு நாய்கள் அட்டகாசம் )
ராமநாதபுரம் மாவட்டத்தில் தெரு நாய்களால் நாள் தோறும் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் அனைத்து தெருக்களிலும் 10- முதல் 20- தெரு நாய்கள் சேர்ந்து சாலைகளில் செல்பவர்களை அச்சுறுத்துவதோடு கடித்தும் வருகின்றன
நாய்க்கடியால் தினமும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிக்கப்படுகின்றனர்
இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெரு நாய்கள் கடிக்க துரத்தும் போது அவர்கள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன
Latest Crime News In Tamil
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் நாய்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஏனெனில் நாய்களை பிடிக்கவும் அதற்கு கருத்தடை செய்து 3 நாட்கள் வைத்து பராமரித்து அதனை மீண்டும் கொண்டு விடவும் போதிய நிதி இல்லாத காரணத்தினால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது இதனால் ராமநாதபுரத்தில் நாய்கள் பெருகிவிட்டன.