- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நாகை அருகே இறையான்குடியில் குளத்தில் மிதந்த தேங்காவை எடுக்க முயன்ற முதியவர் பலி.
நாகை அருகே இறையான்குடியில் குளத்தில் மிதந்த தேங்காவை எடுக்க முயன்ற முதியவர் பலி.
செ.சீனிவாசன்
UPDATED: Jun 29, 2024, 12:53:12 PM
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இறையான்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் முருகையன். 85 வயதான இவர் அதே ஊரில் நடுத்தெருவில் அமைந்துள்ள மன்னாங்குளத்தில் தேங்காய் ஒன்று மிதந்துளளது. அதை எடுப்பதற்காக குளத்தில் இறங்கி உள்ளார்.
அப்போது நிலைத்தடுமாறி குளத்தில் விழுந்தவர் நீரில் மூழ்கி காணாமல் போனார். அங்குள்ளவர்கள் குளத்தில் இறங்கி தேடியும் கிடைக்காத நிலையில் கீழ்வேளூர் தீயணைப்புதுறையினர்க்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் குளத்தில் மூழ்கி காணாமல் போன முருகையனை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.
நீண்ட நேர தேடுதலுக்குப்பின் 20 அடி ஆழத்தில் சேற்றில் புதைந்தவாறு உயிரிழந்து இருந்த முருகையனின் உடலை கரைக்கு கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்து வலிவலம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
நாகை அருகே குளத்தில் மிதந்த தேங்காயை எடுக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு